எங்களை பாதித்த நிகழ்வுகளையும், நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை குறித்த எங்கள் தாக்கங்களை இங்கே பதிவு செய்கிறோம். உங்கள் கருத்துகளும் ஏற்றுக்கொள்ளப்படும்
Friday, February 1, 2008
சென்னை (அ) சுத்தமாகிறது
சென்னை மாநாகராட்சியில் புதியதாக இயற்றப்பட்டுள்ள பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் ரூ.50 அபராதம் என்ற சட்டத்தை எல்லா இடங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். இதனை கண்காணிக்க சில முக்கிய இடங்களில் போலீசாரை நியமிக்கலாம். ஆனாலும் நம் அனைவரும் பொதுஇடங்களில் எச்சில் துப்பும் பழகத்தை விட்டால் ஒழிய சென்னை மாநகரம் சுத்தமாகது. இதுபோல் சட்டம் இயற்றும் முன் மாநாகரட்சி தன் கடமையை சரியாக செய்கின்றதா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
Monday, January 28, 2008
இந்திய குடிமகன்

இந்திய குடியரசு தலைவர்களில் மக்களால் அதிகம் கவரப்பட்டவர் திரு. அப்துல்காலாம் அவர்கள் மட்டுமே. இவரைத் தவிர வேறு யாரும் குடியரசு தலைவராக இந்த அளவுக்கு மக்களை கவர்ந்து இருக்க முடியாது. இவரது நடையும் பேச்சும் அனைவர் மனங்களிலும் இன்றும் நீங்காது இடம்பெற்றுக் கொண்ருக்கிறது. இவருக்கென ஒரு தனி பாணியை அமைத்துக்கொண்டு செயல்பட்ட விதமும் முப்படைகளிலும் காட்டிய ஆர்வமும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் நினைத்துப்பார்த்து பெருமை பட வேண்டிய ஒன்றாகும். முற்றிலும் அரசியல் சாயம் இல்லாது செயல்பட்டவர் இவர் என்பதை யாராலும் மறுப்பதற்கில்லை. இப்படி ஒரு குடியரசு தலைவரை இனி இந்தியா காணுமா என்பது சந்தோகமே? தன்னம்பிக்கை இல்லாதவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இவரது அக்கினிச் சிறகுகள் இவருடைய சாதனைகள் வேதனைகள் எல்லாம் ஒவ்வொரு மாணவனுக்குமான பாடமாக இருக்கும். குடியரசு தினம் கொண்டாடும் இந்த வேளையில் ஒரு நல்ல குடிமகனை அடையாளம் கண்டுகொண்டதில் பெருமிதம் அடைகிறோம்.
அன்புடன்
ரா.கிரிஷ்
Sunday, January 27, 2008
திருத்தங்கள்
2007 ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் எத்தனை திருப்பங்களை ஏற்படுத்தியது. அந்த ஆண்டில் நீங்கள் செய்த நல்ல செயல்கள் எத்தனை. யாருடைய மனதையாவது புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டீர்களா? அந்த ஆண்டில் உங்களை பாதித்த நிகழ்வு எது? உங்களால் செய்யமுடியாத போன காரியம் என்ன அனைத்தையும் ஒருமுறை மனத்திரையில் ஓடவிட்டு பாருங்கள் திருத்த வேண்டியவைகளை இந்த ஆண்டாவது திருத்த முயலுங்கள்
அன்புடன்
ரா.கிரிஷ்
அன்புடன்
ரா.கிரிஷ்
Subscribe to:
Comments (Atom)